சமூகநீதிப்போராளி
வி.பி. சிங்
அவர்களுக்கு
வீரவணக்கம்
"இலங்கையில் நடப்பது அதன் உள்நாட்டுப் பிரச்னை. அதில் இந்தியா தலையிட முடியாது. கருணாநிதி முதலில் இதைப் புரிந்து கொள்ளட்டும்" என்று சொல்லியிருக்கிறாரே ஜெயலலிதா?ஜோ. ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
சொல்லவில்லை, பிதற்றியிருக்கிறார். வங்காள தேசத்தில் ஒரு பிரச்னை என்ற போது இந்தியா தலையிடவில்லையா? காஷ்மீர் தனி ராஜ்ஜியமாக இருந்த போது இந்திய ராணுவம் அங்கே நுழையவில்லையா? அவ்வளவு ஏன், இதே இலங்கைக்கு அமைதிப் படை செல்லவில்லையா? ஊருக்கு ஒரு நீதி என்றால் ஜெயலலிதாவுக்கு மட்டும் தனி நீதி. கொழும்பிலும் வட கிழக்கு இலங்கையிலும் இன்றைக்குத் தமிழர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் ஒவ்வொரு நொடியும் செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் பயங்கரம் போயஸ் தோட்டத்தில் ஏஸி அறையில் சூப் குடித்துக் கொண்டிருப்பவருக்கு எப்படிப் புரியும். தமிழ்ப்புத்தகம் வைத்திருப்பதும், தமிழ் பேசுவதும் படிப்பதுமே குற்றம் என்கிற நிலை அங்கே நிலவுகிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு தமிழனும் இன்று ஈழத்தமிழனின் நிலையைக் கண்டு கொதித்துக் கொண்டிருக்கிறான் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு கருணையும் ஆதரவும் காட்டாதவர்கள் தமிழர்களாக மட்டுமில்லை, மனிதர்களாக இருக்கவே அருகதையற்றவர்கள். நன்றி. குமுதம் வார இதழ்
மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து, மனித சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது, பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும் சிந்திக்கச் செய்வதுமே யாகும். மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடத் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்கித் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் பெற வேண்டும். சீர்திருத்தமும், சுயமரியாதையும், சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம் மனிதன் உலகில் தன் சுயமரியாதையை - தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ளவேண்டும். மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.
தந்தை பெரியார்
"நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். "நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்" என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. "
தமிழ் மக்களுக்குத் தேவையான சில கருத்துக்களைச் சொல்லிப் பதிந்தாக வேண்டும். இன்று ஏற்றுக் கொள்ளா விட்டாலும் நாளை ஒரு நாள் ஏஏற்றுக்கொள்ளும் நிலை வரும். இக்கருத்துக்களை சொல்லும் நிலையில் நான்தான் இருக்கிறேன். சொல்ல வெண்டிய கருத்துக்களை நானே எழுதி,நானே அச்சுக்கோத்து, நானேஅச்சிட்டு, நானே படித்துக்கொள்ளும் நிலைக்குப் போனாலும் குடியரசை வெளியிட்டு என்கருத்துக்களை வரும் தலை முறைக்கு விட்டுச் செல்ல வேண்டியது எனது கடமை. [குடியரசு-10.06.1929]
-தந்தைபெரியார்
எங்களது இதயம் எங்கள் கடமையைச் சுட்டிக் காட்டுகிறது. இனியும் நாங்கள் தயங்கி நிற்கத்துணியமாட்டோம். நாங்கள் எங்கள் கொடியை உயர்த்தி விட்டோம். அந்தக்கரங்களை கீழே இறக்கமாட்டோம். எங்கள் கரங்கள் முறியடிக்கப்பட்டு புழுதிக்குள் புதையுண்டாலொழிய... எங்கள் கரங்கள் உயர்ந்தே நிற்கும். இனி சமரசம் என்ற பேச்சே இல்லை. எங்கள் நியாயங்களுக்கு செவிகள் காது கொடுத்தேதீரும். -ரிவோல்ட் [3-11-1929]
அறம் என்றால் மக்களுக்கு தம்மாலான நல்லனவற்றைச் செய்வதுதான். அதுதான் உண்மையான தொண்டு. இதனை விடுத்து இந்த உலகத்தை விட்டு மோட்ச உலகம் செல்லவேண்டும் என்று கருதியோ, மற்றமுட்டாள் தனமான காரியங்களுக்கோ தொண்டு செய்வதனால் உண்மையான இன்பம் கிட்டாது. -தந்தைபெரியார்