Sunday, June 29, 2008

மாறுதலால் எதிர்கால உலகம்...

சகல சவுகரியங்களுமுள்ள இப் பரந்த உலகில் உணவுக்காகஎன்று ஒருவன் ஏன் பாடுபட வேண்டும்? ஏன் சாக வேண்டும்? என்கின்றபிரச்சினைகள் சிந்தனைக்கு மயக்கமளித்து வந்த சிக்கலான பிரச்சினைகளாக இருந்தன. இன்று தெளிவாக்கப்பட்டும் பரிகாரம் தேடப்பட்டும் வருகிற காலம் நடக்கிறது. இந்த போக்கு சீக்கிரத்தில் மக்களின் பொது வாழ்விலேயே பெரியதொரு புரட்சியை உண்டாக்கும் படியான புதிய உலகத்தை உண்டாக்க்கித்தான் தீரும் அப்போதுதான் பணம்,காசு என்ற உலோக நாணயமே இருக்காது. அரசு ஆட்சி இருக்காது; கடினமான் உழைப்பு என்பது இருக்காது; இழிவான வேலை என்பது இருக்காது; அடிமைத்தன்மை இருக்காது; ஒருவரை ஒருவர் நம்பிக்கொண்டு வாழ வேண்டிய அவசியம் இருக்காது; பெண்களுக்கு காவல் கட்டுப்பாடு பாதுகாப்பு என்பவையான அவசியம் இருக்காது.

2 comments:

தோழர்கள் said...

உங்கள் முயற்சி எங்கள் எதிர்பார்ப்புகளையும் எண்ணங்களையும் பிரதிபலிக்கின்றது... வாழ்த்துக்கள்...

Unknown said...

Periyar had a very naive understanding of the future.
By putting those words in this blog you have helped others to understand this.Thanks.